சாதனை படைத்த பாடசாலை மாணவனுக்கு கிடைத்த அங்கீகாரம்

Report Print Steephen Steephen in சமூகம்

கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரியில் உயர் தர வகுப்பில் பயிலும் கிஹான் ஹெட்டியராச்சி என்ற மாணவன் தயாரித்த ரொக்கட் விமானப்படையின் 68வது ஆண்டு விழா நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்படும் என விமானப்படை அறிவித்துள்ளது.

இந்த கண்காட்சி எதிர்வரும் 2 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதி வர ஹிங்குராக்கொட விமானப்படை முகாமில் நடைபெறவுள்ளது.

இலங்கையை சேர்ந்த பாடசாலை மாணவன் தயாரித்த முதலாவது ரொக்கட் இதுவென கருதப்படுகிறது. இதனை மேம்படுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிதியுதவி வழங்கினார்.

மேம்படுத்தப்பட்ட ரொக்கட்டை விண்ணில் செலுத்த விமானப்படையின் உதவியை பெற்றுக்கொடுக்க ஜனாதிபதி தலையீடுகளை மேற்கொண்டுள்ளார்.