அல் அக்லா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி!

Report Print Gokulan Gokulan in சமூகம்

திருகோணமலை மாவட்டம் கிண்ணியா அல் அக்லா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி பாடசாலை மைதானத்தில் வெகு விமர்சையாக இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வானது இன்று பாடசாலை அதிபர் கே.பிர்தௌஸ் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இவ் விழாவில் பிரதம அதிதியாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சருமான அப்துல்லா மஹரூப் கலந்து கொண்டுள்ளார்.

பாடசாலை மைதானத்துக்கான பார்வையாளர் அரங்கும் பிரதியமைசுசரால் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டுள்ளது. போட்டோ கொப்பி இயந்திரம் என்பனவும் பாடசாலை அதிபரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் பிரதியமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் டாக்டர் ஹில்மி முகைதீன் பாவா, இணைப்பாளர் ஈ.எல்.அனீஸ், கிண்ணியா வலயக் கல்வி உடற்கல்வி பிரிவுக்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் அக்பர் உட்பட ஆசிரியர்கள், பெற்றார்கள் என பலர் கலந்து சிறப்பித்தார்கள்.

Latest Offers