இலங்கை வரும் வெளிநாட்டவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

Report Print Vethu Vethu in சமூகம்

சட்டவிரோதமான முறையில் இலங்கையில் தங்கும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அபராதம் விதிக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

விசா இன்றி தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு 500 அமெரிக்க டொலர் அபராதமாக விதிக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளும் அமைச்சரவை பத்திரம் ஒன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அமைச்சர் வஜிர அபேவர்தனவினால் அமைச்சரவையில் யோசனை ஒன்று சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய புதிய விசா முறை ஒன்று அறிமுகப்படுத்தி வைக்கப்படவுள்ளது. விசாவுக்காக பல்வேறு நாடுகளில் காணப்படும் கடுமையான சட்ட கட்டண முறைக்கு பதிலாக தண்டப்பணம் அறவீடு செய்ய எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்கு மேலதிகமாக சுற்றுலா விசா கால எல்லையை நீடிப்பதற்கும், வர்த்தக நடவடிக்கைகளுக்காக வழங்கப்படும் விசா கால எல்லையை அதிகரிப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.