கந்தளாய் தலைமையக பொலிஸ் நிலையத்தின் வருடாந்த இறுதி அணிவகுப்பு மரியாதை

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை, கந்தளாய் தலைமையக பொலிஸ் நிலையத்தின் வருடாந்த இறுதி அணிவகுப்பு மரியாதை இன்று நடைபெற்றுள்ளது.

குறித்த அணிவகுப்பு கந்தளாய் பொலிஸ் நிலையத்தின் விளையாட்டு மைதானத்தில் பொலிஸ் அத்தியட்சகர் அஜித் கேஸ்ரீ தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இதில் 400இற்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டதோடு அவர்களின் அணி வகுப்பு மரியாதையை பொலிஸ் அத்தியட்சகர் அஜித் கேஸ்ரீ ஏற்றுக் கொண்டுள்ளார்.

இதன்போது உத்தியோகத்தர்களின் ஆடைகள், இடுப்புப்பட்டி மற்றும் வாகன பரிசோதனைகளும் பொலிஸ் அத்தியட்சகரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ் வணிவகுப்பு மரியாதையின் போது பொலிஸ் உதவி அத்தியட்சகர்கள், பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் உட்பட பொலிஸ் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.