தோட்ட பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகளில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய ஆளுநர் நடவடிக்கை

Report Print Thirumal Thirumal in சமூகம்

நுவரெலியா பகுதிகளில் உள்ள தோட்ட பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகளில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கைகள் எடுக்கவுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மற்றும் லிந்துலை ஆகிய பகுதிகளுக்கு நேற்று உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நிலவும் குறைபாடுகள் தொடர்பிலும் கேட்டறிந்துக்கொண்ட போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் லிந்துலை சரஸ்வதி தமிழ் மகா வித்தியாலயத்திற்கு சென்று அங்கு எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நிவர்த்திக்கும் முகமாக தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கைகள் எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, லிந்துலை வைத்தியசாலையில் நிலவி வரும் குறைபாடுகள் தொடர்பில் வைத்தியசாலையின் பிரதான வைத்தியரிடம் கேட்டறிந்ததோடு, அதனை உடனடியாக தீர்க்கும் வகையிலும், தேவையான வசதிகளை செய்து கொடுக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, ஆளுநரின் பிரத்தியேக செயலாளர், அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.