நீதிமன்றத்தினுள் தொலைபேசி வைத்திருந்த நபருக்கு தண்டப்பணம்

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை - கந்தளாய் நீதிவான் நீதிமன்றில் தொலைபேசி சத்தம் இட்டதால் அதனை வைத்திருந்த நபருக்கு இரண்டாயிரம் ரூபாய் தண்டப்பணம் விதித்து கந்தளாய் நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

கந்தளாய் நீதிமன்ற நீதிவான் ஹேமஸ்ரீ பெர்ணாண்டோ குறித்த உத்தரவினை இன்று பிறப்பித்துள்ளார்.

கந்தளாய், அக்போபுர பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவருக்கே இவ்வாறு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் வழக்குத் தவணை ஒன்றிற்காக நீதிமன்றினுள் அமர்ந்திருந்த நிலையில் அலைபேசி ஒலித்தமையால் பொலிஸார் சந்தேக நபரை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே எச்சரிக்கை செய்து தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.