வவுனியாவில் கிரவல் மண்ணுக்குள் காணப்பட்ட மர்ம பொருள்

Report Print Theesan in சமூகம்

வவுனியா - பட்டாணிசூர் பகுதியில் வெடிக்காத நிலையில் இருந்த மோட்டார் குண்டொன்றை இன்று பொலிஸார் மீட்டுள்ளனர்.

பட்டாணிசூர் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்கு முன்பாக கொட்டபட்டிருந்த கிரவல் மண்ணில் சந்தேகத்திற்கிடமான பொருள் இருப்பதை அப்பகுதியினர் அவதானித்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் நெளுக்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிக்கு விஜயம் செய்த பொலிஸார் மோட்டார் குண்டினை அவதானித்துள்ளதுடன் விஷேட அதிரடி படையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் நீதிமன்ற அனுமதியின் பின்னர் குறித்த மோட்டார் குண்டினை அப்பகுதியில் இருந்து அகற்றவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஓமந்தை பகுதியில் இருந்து குறித்த கிரவல்மண் கொண்டுவரப்பட்டு வர்த்தக நிலையத்திற்கு முன்பாக பறிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.