சிங்கப்பூருக்கு பணத்தை கடத்த முயற்சித்த நபர் கைது

Report Print Steephen Steephen in சமூகம்

இலங்கை ரூபாய் நாணயத்தாள்களை சட்டவிரோதமாக சிங்கப்பூருக்கு எடுத்துச் செல்ல முயற்சித்த இலங்கை பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் வெளியேறும் முனைய பகுதியில் இந்த சந்தேக நபர், சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலை தம்பலகாமம் மேற்கு பகுதியை சேர்ந்த 46 வயதான இந்த சந்தேக நபர், சிங்கப்பூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிப்புரிந்து வருபவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் தனது பொருட்களை எடுத்துச் சென்ற பெரிய பயணப் பொதியில், ஆயிரம் ரூபாய், ஐயாயிரம் ரூபாய் நாணயத்தாள்களை மறைத்து வைத்திருந்ததாகவும் அவரது பயணப் பொதியில் இருந்து 48 லட்சத்து 99 ஆயிரம் இலங்கை ரூபாய் கைப்பற்றப்பட்டதாகவும் சுங்க திணைக்களத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.