அலுகோசு பதவிக்கு 102 விண்ணப்பங்கள்

Report Print Steephen Steephen in சமூகம்

தூக்கு தண்டனையை நிறைவேற்றும் அலுகோசு பதவிக்கு 102 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவற்றில் 101 விண்ணப்பங்கள் இலங்கையர்கள் அனுப்பியுள்ளதுடன் ஒரு விண்ணப்பம் அமெரிக்க பிரஜை ஒருவரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த விண்ணப்பதாரிகளில் 45 வயதுக்கு மேற்பட்ட மற்றும் உரிய கல்வி தகுதி இல்லாதவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் திணைக்களம் கூறியுள்ளது.

ஏனைய விண்ணப்பதாரிகள், நேர்முகப் பரீட்சைக்காக அடுத்த சில தினங்களில் அழைக்கப்பட உள்ளனர்.

நேர்முக தேர்வுகள் நடக்கும் தினம் மற்றும் தெரிவு செய்யப்படும் இரண்டு நபர்களின் தகவல்களை இரகசியமாக வைக்க சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.