மாகந்துரே மதுஷ் உட்பட 31 பேர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்

Report Print Steephen Steephen in சமூகம்

துபாய் நாட்டில் கைது செய்யப்பட்ட மாகந்துரே மதுஷ், அங்கொட லொக்கா, கஞ்சிபான இம்ரான் உட்பட 31 சந்தேக நபர்கள் இன்று மீண்டும் அந்நாட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

இவர்கள் அல் ரஃபா பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 2019/55 -33 வழக்கு இலக்கத்தின் கீழ் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

இதற்கு முன்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இந்த சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை நடத்த வேண்டும் என பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இதற்கு அமைய சந்தேக நபர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

துபாயில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில், பிரபல சிங்கள பாடகர்கள் அமல் பெரேரா, அவரது மகன் நதிமால் பெரேரா, நடிகர் ரயன் வென்ரோயன் ஆகியோருடன் திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்ட அங்கொட லொக்கா, கஞ்சிபான இம்ரான் ஆகியோரும் அடங்குகின்றனர்.