யாழ். இந்து தமிழ் கலவன் பாடசாலைக்கு அங்கஜன் இராமநாதன் விஜயம்

Report Print Yathu in சமூகம்

அல்வாய் யாழ். இந்து தமிழ் கலவன் பாடசாலைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் இன்று காலை விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இதன்போது செய்கை பண்ணப்பட்டு வரும் விளை நிலபகுதிகளுக்கு குழாய் நீர் வசதிகள் அவரால் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளன.

மேலும், பாடசாலையின் மேலதிக தேவைப்பாடுகள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாடசாலையில் செய்கை பண்ணும் தோட்டத்தின் வருமானத்திலேயே பாடசாலையை இயக்குகிறேன் என பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார்.

வாழை தோட்டங்கள், தென்னைகள், மரக்கறி பயிர்வகைகள், வீட்டுத்தோட்ட பயிர் இனங்கள், பாடசாலை வளாக பகுதியில் பயிரிடப்பட்டுள்ளன.

இதேவளை, இது ஒரு மனிதநேய பாடசாலை எனவும் தோட்டத்தினால் கிடைக்கும் அறுவடைகளின் மூலம் மாணவர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றதாக அங்கஜன் இராமநாதன் குறிப்பிட்டுள்ளார்.