பொலிஸ் நிலையத்திற்குள் தற்கொலை

Report Print Steephen Steephen in சமூகம்

மகரகமை பொலிஸ் நிலையத்திற்குள் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் தனக்கு வழங்கப்பட்டிருந்த துப்பாக்கியில் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் இன்று அதிகாலை பொலிஸ் நிலையத்தின் போஜன அறையில் நடந்துள்ளது.

காதல் விவகாரம் இந்த சம்பவத்திற்கு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து மகரகமை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.