கிளிநொச்சியில் உப உணவு பயிர் செய்கை மேற்கொள்வதற்கு தீர்மானம்

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சி - பிரமந்தனாறு குளத்தின் கீழ் இவ்வாண்டு சிறுபோகத்தில் 450 ஏக்கர் நிலப்பரப்பில் உப உணவு பயிர் செய்கை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி - கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு பொதுநோக்கு மண்டபத்தில் குளத்திற்கான சிறுபோக பயிர்செய்கை கூட்டம் இன்று நடைபெற்ற போதே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது பல்வேறு அபிவிருத்தி வேலைகளையும் சம நேரத்தில் முன்னெடுக்கும் பொருட்டு 450 ஏக்கர் காணிகளில் உப உணவு பயிர் செய்கையினை மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய மற்றும் நடுத்தர சிறிய நீர்ப்பாசனக் குளங்களின் கீழான பெரும்போக பயிர்ச்செய்கை கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

குறித்த கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு,

602 பங்காளர்களுக்கான 450 ஏக்கர் காணிகள் பகிர்ந்தளிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இப்பயிற்சியின் போது உழுந்து , பயறு, நிலக்கடலை, சோளம் போன்ற பயிர்களை பயிரிட வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த நிலப்பகுதிகளில் நீண்ட கால பயிர்கள் எதனையும் அதாவது தென்னை, மா, பலா போன்ற பயிர்கள் பயிரிட முடியாது என்றும் பயிர்ச்செய்கையின்போது கால்நடைகளை கட்டுப்படுத்துதல், வாய்க்கால்களை துப்பரவு செய்தல் போன்ற செயற்பாடுகளை கூட்டத் தீர்மானத்துக்கமைய முன்னெடுக்குமாறும் இவற்றை மீறி செயற்படுவோருக்கு கூட்டத்தின் தீர்மானத்தின்படி சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்துமாறும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், கண்டாவளை பிரதேச செயலாளர் ரீ. பிருந்தாகரன், நீர்ப்பாசன பொறியியலாளர் பரனிதரன், விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாயிகள், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.