போலிக் கடன் அட்டையை பயன்படுத்தி பொருள் கொள்வனவு செய்தவர்கள் கைது

Report Print Mubarak in சமூகம்

நாட்டின் பல பகுதிகளிலுள்ள விற்பனை நிலையங்களில் போலிக் கடன் அட்டையை பயன்படுத்தி பொருள் கொள்வனவு மேற்கொண்ட மூவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

மாத்தளை, தம்புள்ளை பகுதியில் இன்று சந்தேக நபர்கள் மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 35,31 மற்றும் 43 வயதுடைய சிலாபம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபர்களிடமிருந்து பல வங்கிகளின் வீசா அட்டைகள் மற்றும் இரண்டு அடையாள அட்டைகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேக நபர்கள் வேறு நபர்களுடைய கடன் அட்டையை பயன்படுத்தி மேற்கொண்ட குற்றச் செயல்கள் தொடர்பில் நாட்டின் பல பகுதிகளில் உள்ள நீதிமன்றங்களில் சந்தேக நபர்களுக்கெதிராக வழக்குகள் விசாரணையில் உள்ளமை இதன்போது தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்களை தடுத்து வைத்துள்ளதோடு, நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.