இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான விமான சேவைகள் இரண்டாவது நாளாகவும் இடைநிறுத்தம்

Report Print Steephen Steephen in சமூகம்

பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு இடையிலான விமான சேவைகளை இரண்டாவது நாளாகவும் இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் பணிகளுக்கு பொறுப்பான அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், மார்ச் முதலாம் திகதியான நாளைய தினமும் பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான விமான சேவை இடம்பெறாது எனவும் அவர் கூறியுள்ளார்.

பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் போர் பதற்றம் ஏற்பட்டதால், பாகிஸ்தான் சிவில் விமான சேவைகள் அதிகார சபை நேற்று மதியம் முதல் தனது வான் பரப்பை தற்காலிகமாக மூடியது.

இதனையடுத்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து பாகிஸ்தானின் கராச்சி, லாகூர் நகரங்களுக்கான விமான சேவைகள் அனைத்தும் நாளைய தினம் வரை இடைநிறுத்தப்பட்டன.

பாகிஸ்தான் சர்வதேச விமான சேவை, அந்நாட்டில் இருந்து இலங்கைக்கு இயக்கப்படும் விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்தியது.