விபத்துக்களில் சிக்கி ஒரு வாரத்தில் 18 பேர் பரிதாபச் சாவு!

Report Print Rakesh in சமூகம்

நாட்டில் கடந்த 7 நாட்களில் இடம்பெற்ற விபத்துக்களில் சிக்கி 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

வாகன விபத்துக்களில் 13 பேரும், ரயில் விபத்துக்களில் 5 பேரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இவர்களில் இரண்டு சிறுமிகள் மற்றும் மூன்று யுவதிகள் உட்பட 7 பெண்களும், மூன்று சிறுவர்கள் மற்றும் நான்கு இளைஞர்கள் உட்பட 11 ஆண்களும் அடங்குகின்றனர்.

பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்ட செய்திக் குறிப்புகளிலிருந்து இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.