முல்லைத்தீவில் அதிரடி படையினரால் இருவர் கைது

Report Print Theesan in சமூகம்

முல்லைத்தீவில் தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து இன்று மாலை 4.30மணியளவில் நாடாத்திய திடீர் சுற்றிவளைப்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு குளப்பகுதியில் இடம்பெற்ற இந்த சுற்றிவளைப்பில் நன்நீர் மீன்பிடித்தலுக்காக தடை செய்யப்பட்ட சட்ட விரோதமான தங்கூசி வலைகளை வைத்திருந்த குற்றத்திற்காக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 15லட்சம் ரூபா பெறுமதியான தடைசெய்யப்பட்ட தங்கூசி வலைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இச் சுற்றி வளைப்பினை தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகார சபையின் பிராந்திய நீரியல் விரிவாக்கல் அலுவலகத்தின் நீர் உயிரின செய்கை விரிவாக்கல் அதிகாரி யோகநாதன் நிசாந்தன் தலைமையில் அலுவலக உத்தியோகத்தர்களுடனும், மடுகந்தை விஷேட அதிரடிபடையின் பொறுப்பதிகாரி இன்ஸ் பெக்டர் அமுனுபுர அவர்களின் நெறிப்படுத்தலில் விஷேட அதிரடிப்படையினருடன் இணைந்து இச் சுற்றிவளைப்பினை மேற்கொண்டிருந்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் கைப்பற்றப்பட்ட வலை மற்றும் நபர்களை எதிர்வரும் 7ம் திகதி அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.