அலுகோசுக்காக விண்ணப்பித்த வெளிநாட்டவர் நிராகரிப்பு

Report Print Ajith Ajith in சமூகம்

இலங்கையில் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்காக கோரப்பட்டுள்ள அலுகோசுக்கான பதவிக்காக 102 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இதில் ஒரு அமெரிக்கரும் உள்ளடங்குகிறார். எனினும் வெளிநாட்டவர் என்றக் காரணத்தினால் குறித்த அமெரிக்கரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

ஏனைய விண்ணப்பங்களுக்கு உரியவர்கள் விரைவில் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படவுள்ளனர்.

போதைப்பொருள் குற்றங்களுக்கு உள்ளானவர்களுக்கு மரணத்தண்டனை விதிக்கப்படும் என்பதை ஜனாதிபதி தொடர்ந்தும் வலியுறுத்தி வருகிறார்.

இதேவேளை, போதைப்பொருள் குற்றச்சாட்டு தொடர்பில் 48பேர் மரணத்தண்டனையை பெற்றுள்ளனர். எனினும் அதில் 17பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்று ஜனாதிபதி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.