திருகோணமலையில் யானை தாக்கி இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை - இறக்கக்கண்டி பகுதியில் யானை தாக்கி ஒரு வயது பிள்ளையின் தந்தை இன்று (28)மாலை உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை, இறக்ககண்டி நான்காம் வட்டாரத்தைச் சேர்ந்த அப்துல் ஹஸன் றிஸ்வான் (29 வயது) என பொலிஸார் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

இன்று வியாழக்கிழமை மாலை நான்கு மணியளவில் 51 வயதுடைய சாவுல் ஹமீட் உமர்தீன் என்பவருடன் குளிக்கச் சென்ற போது இருவரையும் யானை துரத்தியுள்ளது.

பயத்தில் இருவரும் வெவ்வேறு பகுதிகளுக்கு ஓடியதாக உயிரிழந்த நபருடன் சென்ற சாவுல் ஹமீட் உமர்தீன் கூறியுள்ளார்.

இதன்போது, அப்துல் ஹஸன் றிஸ்வான் யானை தாக்கி கீழே விழுந்துள்ளார். இந்நிலையில், அயலிலுள்ள வயல் காரர்களை அழைத்து யானையை விரட்டி விட்டு வீழ்ந்து கிடந்தவரை கொண்டு வந்துள்ளனர்.

இதேவேளை, உயிரிழந்தவரின் சடலம் நிலாவெளி பிரதேச வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.