யாழிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற சொகுசு பேருந்து விபத்து : நான்கு பேர் படுகாயம்

Report Print Yathu in சமூகம்

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்ற சொகுசு பேருந்து ஒன்று கிளிநொச்சி பரந்தன் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த சம்பவம் இன்று இரவு 11.20 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

எ-9 பிரதான வீதியில் தரித்து விடப்பட்டிருந்த டிப்பர் வாகனம் ஒன்று சடுதியாக வீதியில் நுழைந்துள்ளது.

இதனையடுத்து சொகுசு பேருந்தின் சாரதி பேருந்தை திருப்ப முயற்சித்த போது வீதியிலிருந்து விலகிய பேருந்து மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த சம்பவத்தையடுத்து டிப்பர் வாகனத்தின் சாரதி தப்பி ஓடியுள்ளார். மேலும் ,பேருந்தின் சாரதி உள்ளட்ட 4 பேர் விபத்தில் படுகாயமடைந்துள்ளனர்.

இதேவேளை, படுகாயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், விபத்துதொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.