வவுனியா அகில இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையில் மாணவர் சந்தை நிகழ்வு!!

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா அகில இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலை மாணவர் சந்தை நிகழ்வு இன்று கல்லூரியின் அதிபர் இ.நவரட்ணம் தலைமையில் நடைபெற்றது.

தரம் 2 இலிருந்து தரம் 5 வரையான மாணவர்கள் பாடசாலையில் மண்டபத்தில் ஆர்வத்துடன் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

மாணவர்களுக்கிடையில் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கவும், ஆளுமை தன்மையை மாணவர்களுக்கிடையில் வளர்க்கும் நோக்குடனான கல்வி நடவடிக்கையின் ஓர் அங்கமாகவே இச்சந்தை நிகழ்வு நடைபெற்று வருவதாக பாடசாலையின் அதிபர் தெரிவித்தார்.

இச்சந்தை நிகழ்வை பார்வையிட்ட ஆசிரியர்கள் பெற்றோர்கள் பாடசாலை நலன் விரும்பிகள் மாணவர்களின் சந்தை பொருட்களை ஆர்வமுடன் கொள்வனவு செய்ததை காணக்கூடியதாக இருந்தது.