நட்டஈடுவழங்க அரசு முன்வ வேண்டும்! பூ.பிரசாந்தன்

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாடுகள் தொடர்ந்து இறப்பது தொடர்பாக ஆராயும் முகமாக கிரான் மயிலத்த மடு, தொப்பிக்கலை, குடிம்பிமலை உள்ளிட்ட பகுதிக்கு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி பயணம் செய்துள்ளது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட பண்ணையாளர்கள், வைத்திய அதிகாரி உள்ளிட்டோரிடம் கலந்துரையாடி நிலமையினை கேட்டறிந்ததாகவும்

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அமைச்சின் செயலாளர்களுடன் கலத்துரையாடியதாகவும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர்,

“மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் ஜீவநோபாயத் தொழிலான இக்கால்நடை வார்ப்புத்துறையானது எதிர்நோக்கும் இப்பாரிய கால்நடை இறப்புச் சவாலினை தடுத்து நிறுத்துவதற்கு விஷேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட வேண்டும்

பாதிக்கப்பட்ட பண்ணையாளர்களுக்கு நட்டஈடு வழங்க அரசு முன்வருவதுடன், மிகநீண்டகாலமாக தீர்க்கப்படாமலுள்ள மேச்சல் தரைப்பிரச்சனைக்கும் தீர்வுகாணப்பட வேண்டும்” என கூறியுள்ளார்.

இவ் விஜயத்தின் போது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன தலைமையில் பிரதித்தலைவர் க.யோகவேல், கோரளைப்பற்று பிரதேச சபைத்தவிசாளர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.