இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த மணல் அகழ்வுக்காக மீண்டும் அனுமதி

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை மாவட்டத்தில், தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த மணல் அகழ்வுக்கான அனுமதியை நாளை (01) மீண்டும் வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்டச் செயலகத்தில், இன்று (28) நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் முன்னெடுக்கப்பட்டள்ளது.

கடந்த 2018 டிசெம்பர் 31ஆம் திகதியிலிருந்து இடை நிறுத்தப்பட்டிருத்த இடைக்கால தடை உத்தரவை நீக்குவது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதன் பின்னரே, மேற்கண்ட தீர்மானம் எட்டப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில், புவிச்சரிதவியல், அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகப் பணிப்பாளர் அசேல இத்தவெல, மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமார, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுசந்த புஞ்சி நிலமே, அரச அதிகாரிகள் பலர் பங்கேற்றிருந்தனர்.