ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை வழங்க அறிவுறுத்தல்

Report Print Theesan in சமூகம்

வவுனியாவில் தனியார் கல்வி நிலையங்களுக்கு நாளை முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை வழங்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக பிரதேச சபை தலைவர் து.நடராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமைகளில் க.பொ.த உயர்தரம் மற்றும் க.பொ.த சாதாரணம் தவிர்ந்த ஏனைய தனியார் வகுப்பு நிலையங்களுக்கு விடுமுறை வழங்குவதற்கு பிரதேசசபையில் தீர்மானம் ஒன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் நாளை முதல் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள தனியார் கல்வி நிலையங்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நகரசபை தலைவரினால் பொலிஸாருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.