கிண்ணியா மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி!

Report Print Gokulan Gokulan in சமூகம்

திருகோணமலை - கிண்ணியா மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி பாடசாலை மைதானத்தில் வெகு விமர்சையாக இடம்பெற்றுள்ளது.

பாடசாலை அதிபர் எஸ்.எம்.எம்.அனீபா தலைமையில் இன்று நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கலந்து சிறப்பித்துள்ளார்.

துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் கௌரவ அதிதியாக பங்கேற்றதுடன், இராஜாங்க அமைச்சர், பிரதியமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை பாடசாலை மாணவர்கள் வரவேற்றிருந்தனர்.

வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில்களும் சான்றிதழ்களும் இதன் போது குறித்த அதிதிகளால் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். பல்வேறு கலை, கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நிகழ்வில் மேலும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ்.தௌபீக், இம்ரான் மஹரூப் ,கல்வி இராஜாங்க அமைச்சின் உதவிச் செயலாளர், கிண்ணியா வலயக் கல்வி பணிப்பாளர், பெற்றார்கள், ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Latest Offers