கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு நாளை மறுதினம் விடுமுறை

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

சிவராத்திரி தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 05ஆம் திகதி கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏம்.ஹிஸ்புல்லஹ் கிழக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் அதிகளவில் இந்து மக்கள் வாழ்ந்து வரும் வேளையில் சிவராத்திரி தினத்தன்று வழிபாடுகளில் ஈடுபட்டு வருவது வழக்கமாகும்.

இதில் பெரியோர்கள் மாத்திரமின்றி பாடசாலை செல்லும் மாணவர்களும் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு மறுநாள் பாடசாலை செல்ல முடியாத நிலை காணப்படுகிறது.

இவ்விடயத்தை கவனத்தில் கொண்டு செவ்வாய் கிழமை விடுமுறை விடப்பட்டுள்ளதாகவும், அன்றைய தினத்திற்காக மற்றுமொரு நாளில் பாடசாலை நடத்தவுள்ளதாகவும் ஆளுநரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.