பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

Report Print Nesan Nesan in சமூகம்

மக்கள் நலன் காப்பகத்தின் ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் யுத்தத்தினால் இயல்பு நிலை பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வில் இடம்பெற்றுள்ளது.

இன்று பட்டிப்பள கொல்லநுலை வித்தியாலயத்தில் இடம்பெற்றுள்ளது.

முப்பது வருட காலமான நடைபெற்றுவந்த கொடிய யுத்தத்தின் போது பல நூற்றுக்கணக்கான மக்கள் அசாதாரண நிலையிலிருந்து இயல்பு நிலை பாதிக்கப்பட்டு வாழ்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் கிழக்கு மாகாணத்தை பொருத்தவரையில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்பவர்கள் விதவைகள் அங்கவீனமுற்றவர்கள் தாய் தந்தையினரை இளந்த பிள்ளைகள் என பலர் தமது வாழ்வாதாரத்தை மேலுயரத்துவதற்காக எந்தவித வழிவகைகளும் எமது சமுதாயத்திற்கு குறைவாகவே கிடைக்கின்றன.

அந்தவகையில் தற்போதைய காலகட்டத்தில் உள்ள சூழ்நிலையில் எமது தமிழ் சமூகம் கல்வியினையே ஒரு ஆயுதமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் அப்போது தான் இவ்வாறான நிலைகளை மாற்றியமைக்ககூடியதாக அமையும் அத்துடன் இன்று மக்கள் நலன் காப்பகத்தின் மூலமாக இக்கற்றல் உபகரணங்களை கையளிக்கின்றனர்.

இதனை நாம் கருத்தில் கொண்டு அதனை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் ஆகவே இவ்வுதவியின். மூலம் நான் நல்லபடியாக படித்து முந்நிலையில் வர முயற்சி எடுக்க வேண்டும் என இவ்விடத்தில் கூறிக்கொள்ளவிருப்புகின்றேன்.

இந்நிகழ்வின் பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கொல்லநுலை வித்தியாலயத்தின் அதன் அதிபர் எஸ்.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

இதன் போது மக்கள் நலன் காப்பகத்தின் மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பாளர் நீலவன் மாணவர்கள் ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

அத்துடன் அம்பாறை மாவட்டத்திற்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு அக்கரைப்பற்று கண்ணகிபுரம் கிராம அபிவிருத்தி சங்க கட்டட வளாகத்தில் நடைபெற்றது. இதில் 27 வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Latest Offers