தென்னிலங்கையில் வெளிநாட்டவரின் அட்டகாசம்! பெரும் அச்சத்தில் பயணிகள்

Report Print Vethu Vethu in சமூகம்

ஓடும் ரயிலில் குழம்பம் ஏற்படுத்திய வெளிநாட்டு பிரஜை ஒருவரை ஹிக்கடுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ரயிலில் பயணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்திய 30 வயதான உக்ரைன் நாட்டவர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டவரின் செயற்பாடு காரணமாக ரயிலில் பயணித்த பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர். இது குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளளனர்.

குறித்த வெளிநாட்டவர் ரயிலில் பயணிகள் பயணித்து கொண்டிருந்த போது பயணிகளுடன் மோசமாக நடந்து கொண்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.