மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் மஹா சிவராத்திரி நிகழ்வு

Report Print Yathu in சமூகம்

இந்துக்களால் வெகு விமர்சையாக நேற்றைய தினம் இரவு முழுவதும் மஹா சிவராத்திரி கொண்டாடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மன்னாரில் பாடல் பெற்ற தலமான திருக்கேதீஸ்வரத்திலிலும் சிறப்பாக மஹா சிவராத்திரி பூஜைகள் மற்றும் நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.

இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் தென் பகுதிகளில் இருந்து மக்கள் வருகை தந்து திருக்கேதீஸ்வரத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தனர்.

ஆலயத்தில் காலை முதல் பல்வேறுபட்ட சமய நிகழ்வுகள் மற்றும் பூஜைகள் இடம்பெற்றதுடன் மஹா சிவராத்திரியின் சிறப்பு தொடர்பான பல்வேறு சொற்பொழிவுகளும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக செய்திகள் - ஆஸிக்