வவுனியாவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஐவர் கைது

Report Print Theesan in சமூகம்

வவுனியா - தட்சணாங்குளம் பகுதியிலுள்ள கள்ளுத்தவறணை ஒன்றில் சட்டவிரோதமாக சூது விளையாடிய ஐவர் கைதாகியுள்ளனர்.

ஒரு தொகை பணத்துடன் நேற்று பிற்பகல் சந்தேகநபர்கள் ஐந்து பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பண்டாரிக்குளம் குளக்கட்டு வீதியூடாக தட்சணாங்குளம் செல்லும் குளக்கட்டிலுள்ள கள்ளுத்தவறணையில் நீண்ட காலமாக சட்டவிரோதமாக முறையில் பணம் வைத்து சூது விளையாடப்பட்டு வருவதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து சூது விளையாட்டிற்கு பயன்படுத்தப்பட்ட ஒரு தொகை பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளின் பின் சந்தேகநபர்களை இன்றைய தினம் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.