இளம் அமைதி ஊடகவியலாளர்களுக்கான கலந்துரையாடல்

Report Print Sumi in சமூகம்

கொழும்பில் இளம் அமைதி ஊடகவியலாளர்களுக்கான கலந்துரையாடல் ஒன்று நடைபெற உள்ளது.

கொழும்பில் உள்ள இளைஞர் அமைதிக்கான ஊடகவியலாளர்கள் ரிட்ரட்-ரீயூனியனில் எதிர்வரும் 8, 9ஆம் திகதிகளில் இக்கலந்துரையாடல் இடம்பெற உள்ளது.

இலங்கை அபிவிருத்தி ஊடகவியலாளர் மன்றம், சர்வதேச ஆராய்ச்சி மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் ஏற்பாட்டில் இக்கலந்துரையாடல் இடம்பெற உள்ளது.

இதன்போது குறித்த நிறுவனத்தின் கீழ் முதலாம் ஆண்டில் கல்வி பயிலும் 34 இளம் அமைதி ஊடகவியலாளர்களுக்கு விருது வழங்கப்பட உள்ளது.