போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த நான்கு பேர் கைது

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை - கந்தளாய் உள்ளிட்ட வெவ்வேறு பகுதிகளில் ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் நான்கு சந்தேகநபர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கந்தளாய் பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.

திஸ்ஸபுர பகுதியில் 1142 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஈ.எம்.உதார றுவன் ஏக்கநாயக்க (23 வயது) என்ற இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் வழங்கிய தகவலையடுத்து 2024 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பாத்தியகம பகுதியை சேர்ந்த பீ.எம்.மிதுன் தரிது பண்டார (23 வயது) என்பவர் கைதாகியுள்ளார்.

இதன் பின் அக்போபுர பகுதியில் 183 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் டபிள்யூ.எச்.சமீர பிரசங்க சில்வா (31 வயது) மற்றும் 286 மில்லிகிராம் ஹெரோயினுடன் ரஜ எல பகுதியை சேர்ந்த இளைஞரொருவர் என இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்களையும் கந்தளாய் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.