கந்தளாய் பிரதேசத்தில் சிறுபோக நெல் அறுவடை மும்முரம்

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை, கந்தளாய் பிரதேசத்தில் 84,905 ஏக்கரில் செய்கை செய்யப்பட்ட சிறுபோக அறுவடை மும்முரமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கந்தளாய் பிரதேசத்தில் பொட்டம்காடு, பேராறு, வான்எல மற்றும் நான்காம் வாய்க்கால் போன்ற பகுதிகளிலே இயந்திரங்கள் மூலமான அறுவடைகள் நடைபெற்று வருகின்றன.

ஒரு ஏக்கருக்கு 20 மூடைகளே விளைந்துள்ளதாகவும் குறைந்த விலையிலே நெல்லினை முதலாளிமார்கள் கொள்வனவு செய்து வருவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

நெல்லிற்கான நிர்ணய விலையில் தமக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் கொள்வனவு செய்யுமாறு விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.