போதைப்பொருள் வைத்திருந்த நபருக்கு நீதிமன்றம் விதித்த உத்தரவு

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலையில் 530 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த நபரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் குறித்த நபரை இன்று ஆஜர்படுத்திய போதே இம் மாதம் 07ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் திருகோணமலை பகுதியை சேர்ந்த 23 வயதுடைய ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சீனக்குடா பகுதியில் குறித்த நபர் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனை செய்து வருவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைக்க பெற்றுள்ளதையடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.