மலையாளபுரத்தில் யானைகள் அட்டகாசம்!

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சி - மலையாளபுரம் பகுதியில் என்றுமில்லாதவாறு வான் பயிர்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதிக்கு நேற்று இரவு நுழைந்த மூன்று யானைகள் இவ்வாறு பயன்தரும் மரங்களை சேதமாக்கியுள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

உள் நுழைந்த யானைகளை துரத்த முற்பட்டபோது யானைகள் தங்களை தாக்க முற்பட்டதாகவும், கிராமத்தவர்களின் உதவியுடன் யானைகளை விரட்டியதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

வளர்ப்பு யானைகள் போன்றே குறித்த யானைகள் செயற்பட்டதாகவும், மக்கள் மத்தியில் பழகிய யானைகள் போலவே காணப்பட்டது என்றும் பொதுமக்களால் தெரிவிக்கப்படுகிறது.

இவை வளர்க்கப்பட்டு இங்கு கொண்டுவந்து விடப்பட்டுள்ளதாக சந்தேகிக்கும் மக்கள், குறித்த யானையின் லத்தியில் பொலித்தீன்கள், கித்துல் மர கழிவு ஆகியன காணப்பட்டுள்ளது.

குறித்த யானைகள் இரவோடு இரவாக இங்கு கொண்டுவந்து விடப்பட்டுள்ளதாக மக்கள் சந்தேகிக்கின்றனர் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சம்பவம் தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் விசனம் தெரிவித்துள்ளனர்.