கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி புகையிரதத்தில் பயணித்த இளைஞர் அவசர சிகிச்சை பிரிவில்

Report Print Thileepan Thileepan in சமூகம்
317Shares

கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி சென்ற புகையிரதத்தில் இருந்து இன்று அதிகாலை இளைஞர் ஒருவர் தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் வவுனியா - செட்டிக்குளம் பகுதியில் வைத்து இடம்பெற்றுள்ளதுடன், காயமடைந்தவர் வவுனியா பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் 24 வயது மதிக்கத்தக்க மடு பிரதேசத்தை சேர்ந்த இளைஞரே காயமடைந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.

குறித்த இளைஞர் புகையிரதத்தின் மிதிபலகையில் அமர்ந்தவாறு பயணம் செய்துள்ளார். இந்த நிலையில் அவர் தூக்க கலக்கம் காரணமாகவே தவறி புகையிரதத்தில் இருந்து கீழே விழுந்துள்ளதாக தெரியவருகிறது.

சம்பவம் தொடர்பில் மக்கள் கருத்து தெரிவிக்கையில்,

அதிகாலையில் இளைஞர் ஒருவரின் அலறல் சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு சென்ற போது அவர் நடக்க முடியாத நிலையில் தண்டவாளத்தின் அருகிலிருந்து கூக்குரல் இட்டார்.

இதனை அவதானித்தவர்கள் உடனடியாக பறயனாலங்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து அங்கு விரைந்த பொலிஸார் குறித்த இளைஞரை செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

எனினும் படுகாயங்களுக்கு உள்ளான குறித்த இளைஞர் அங்கிருந்து வவுனியா பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவிற்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளார் என குறிப்பிட்டுள்ளனர்.