திருகோணமலையில் எட்டு கஞ்சா கட்டுகளுடன் ஒருவர் கைது

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை, தம்பலகாமம் பகுதியில் கேரள கஞ்சா விற்பனை செய்து வரும் வியாபாரியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த நபர் இன்று காலை கிண்ணியா, சூரங்கால் பகுதியிலிருந்து முள்ளிப்பொத்தானைக்கு செல்லும் போது எட்டு கேரளா கஞ்சா கட்டுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் முள்ளிப்பொத்தானை பகுதியை சேர்ந்த 51 வயதுடைய நபர் என தெரியவருகிறது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை பொலிஸார் தடுத்து வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.