பாடசாலைக்கு முன்பாக பாதுகாப்பு தடை ஏற்படுத்தித்தருமாறு கோரிக்கை

Report Print Theesan in சமூகம்

வவுனியா - ஆசிகுளம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலைக்கு முன்பாக உள்ள வீதிக்கு பாதுகாப்புத்தடை ஒன்றினை ஏற்படுத்தித்தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிதம்பரபுரம் - மயிலங்குளம் ஊடாக வவுனியா செல்லும் பேருந்துகள் உட்பட பல வாகனங்கள் அவ்வீதியால் அதிக வேகமாகச் செல்கின்றமையால் பாடசாலைக்கு மாணவர்கள் சென்று வருவதில் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதாகவும், மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பாடசாலை நேரத்திலும் இவ்வீதியூடாகச் செல்லும் பேருந்துகள் அதிக வேகத்துடன் செல்கின்றமை தொடர்பில் பல்வேறு கோரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும் எவ்விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாத நிலையில் காணப்படுகின்றது.

எனவே பாடசாலைக்கு முன்பாக உள்ள வீதியில் வாகனத்தின் வேகத்தினை கட்டுப்படுத்தி பாதுகாப்புத் தடை ஒன்றினை ஏற்படுத்தி தருமாறு அப்பகுதி மக்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.