திருகோணமலை, மூதூர் பிரதேசத்தில் கேரளா கஞ்சா வைத்திருந்த இருவரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் குறித்த நபர்களை இன்று ஆஜர்படுத்திய போதே இம்மாதம் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மூதூர் பகுதியைச் சேர்ந்த 20 மற்றும் 48 வயதுடைய தந்தையும், மகனுமே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மூதூர் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து 1350 மில்லி கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.