வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற சிவராத்திரி நிகழ்வு

Report Print Thileepan Thileepan in சமூகம்

இந்து மக்கள் அனுஸ்டிக்கும் விசேட விரதங்களில் முக்கியமானதொரு விரதமாக சிவராத்திரி விளங்குகின்றது.

சிவராத்திரியை முன்னிட்டு நாட்டில் உள்ள இந்து ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளது.

அந்தவகையில் வவுனியா உள்ள சிவ ஆலயங்களில் முதன்மையானதும் சிறப்புமிக்கதுமான கோவில்குளம் அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி பூஜைகள் பெருமளவிலான பக்த அடியார்கள் புடை சூழ மிகவும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

ஆலயத்தின் பிரதம குரு சங்கரதாச குருக்கள் தலைமையில் விசேட அபிடேகம் மற்றும் ஆறுகால பூஜைகளும் இடம்பெற்று அகிலாண்டேஸ்வரர் சமேத அகிலாண்டேஸ்வரி பெருமான் உள் வீதி, வெளி வீதி வலம் வந்து சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

பெருமளவிலான பக்தர்கள் மூல மூர்த்தியாகிய சிவலிங்கத்திற்கு தண்ணீர் வார்த்தும், பால் வார்த்தும் தமது நிவர்த்திக் கடன்களை நிறைவு செய்ததுடன், ஆலயத்தில் இடம்பெற்ற கலை, கலாசார, இந்து சமய நிகழ்வுகளையும் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.

இதேபோல், வவுனியா மாவட்டத்தில் வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயம், உக்கிளாங்குளம் சிவன் கோவில், தோணிக்கல் சிவன் கோவில் என்பவற்றிலும் சிவராத்திரி நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றன.