புதிதாக திருமண பந்தத்தில் இணையும் அனைவருக்கும் மகிழ்ச்சி கொடுத்த அரசாங்கம்

Report Print Vethu Vethu in சமூகம்

இலங்கையில் புதிதாக திருமண பந்தத்தில் இணையும் தம்பதியருக்கு நிதியமைச்சர் மங்கள சமரவீர மகிழ்ச்சியான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட 2019ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிதாக திருமணம் செய்து கொள்வோருக்கு 25 வருடங்களில் செலுத்த கூடிய "Home Sweet Home" என்ற கடன் முறையை அறிமுகப்படுத்தி வைக்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

25 வருடங்கள் செலுத்தி நிறைவு செய்ய கூடிய இந்த கடனுக்கு 6 வீத வட்டி அறிவிடப்படும்.

வெளிநாட்டில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு “கனவு மாளிகை” என்ற கடன் வசதியும் அறிமுகம் செய்யப்படவுள்ளது. அந்த கடனை இரண்டு வருடங்களுக்கு பின்னர் செலுத்த முடியும் எனவும், 15 வருடங்களுக்குள் அதனை செலுத்தி நிறைவு செய்ய முடியும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.