வத்தளை புனித அந்தோனியார் தேசியக் கல்லூரியின் தமிழ் பிரிவிற்கான கட்டடம் ஒன்று நாளை திறந்து வைக்கப்படவுள்ளது.
இது குறித்த நிகழ்வு கல்லூரியின் அதிபர் தலைமையில் நாளை காலை 9 மணிக்கு இடம்பெறவுள்ளது.
வத்தளை புனித அந்தோனியார் தேசியக் கல்லூரியின் தமிழ் பிரிவிற்காக மூன்று மாடி கட்டடம் நீண்ட நாள் தேவையாக இருந்து வருகின்ற நிலையில், அதனை நிர்மாணிப்பதற்கு அந்த கல்லூரியின் தமிழ் பிரிவு பழைய மாணவர்கள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
இதன் பயனாக குறித்த கட்டடத்தின் முதல் மாடி ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதற்கான முழுமையான நிதிப்பங்களிப்பை கல்லூரியின் தமிழ் பிரிவு பழைய மாணவர்களும், பெற்றோர்களும் செய்திருந்தனர்.
இந்நிலையிலேயே, குறித்த கட்டடம் மாணவர்களின் பாவனைக்காக நாளை திறந்து வைக்கப்படவுள்ளது. இந்நிகழ்வில், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், பிரதேச முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.