வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த பெண் கடத்தல்! காதலனுக்காக காத்திருந்தவருக்கு நேர்ந்த கதி

Report Print Vethu Vethu in சமூகம்

வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த பெண்ணொருவர் கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

ஹிக்கடுவ பகுதியில் வைத்து வெளிநாட்டு பெண்ணை கடத்திச் சென்று துஷ்பிரயோகம் செய்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

காதலனை அழைத்து வருவதற்கு வேன் ஒன்றிற்காக காத்திருந்த ஹங்கேரி நாட்டு பெண்னே இவ்வாறு கடத்தப்பட்டு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

வெளிநாட்டு பெண்ணை கடத்தி சென்றதாக கூறப்படும் வேனையும் ஹிக்கடுவை பொலிஸார் தங்கள் பொறுப்பில் எடுத்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் பயாகல பிரதேசத்தை சேர்ந்த திருமணமாகாதவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹங்கேரி நாட்டை சேர்ந்த 31 வயதான சிசேவென்கா ரெனெட்டா என்ற பெண் ஹிக்கடுவ பொலிஸாரிடம் மேற்கொண்ட முறைப்பாட்டிற்கமைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான சாரதி இந்த பெண்ணை தொடன்துவ பாலத்திற்கு அருகில் வாகனத்திற்குள் வைத்து துஷ்பிரயோகம் செய்துள்ளமை உறுதியாகியுள்ளது.