வீதியை கடந்து சென்ற பூனையைக் காப்பாற்ற முயற்சித்து தன் உயிரை தியாகம் செய்த சாரதி

Report Print Kamel Kamel in சமூகம்

வீதியைக் கடந்து சென்ற பூனை ஒன்று விபத்துக்குள்ளாவதனை தடுப்பதற்கு முயற்சித்த சாரதியொருவர் விபத்தில் சிக்கி பலியாகியுள்ளார்.

அம்பலங்கொட, ஹங்கம மித்தெனிய பிரதேசத்தில் அண்மையில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முச்சக்கர வண்டியில் பயணம் செய்த நபர், வீதியைக் கடந்து சென்ற பூனை விபத்தில் சிக்குவதனை தவிர்க்க முயற்சித்த போது, சாரதி முச்சக்கரவண்டியிலிருந்து கீழே வீழ்ந்துள்ளார்.

இவ்வாறு வீதியில் வீழ்ந்த முச்சக்கர வண்டி சாரதி எதிரில் வந்த மோட்டார் வாகனத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளதுடன், எம்பிலிபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

40 வயதான கமகே நிசாந்த என்ற நபரே சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மோட்டார் வண்டியின் சாரதியான அஜித் சிசிர குமார என்பவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.