வரவு செலவுத் திட்டம் திருப்தி அளிக்கின்றது! துமிந்த திஸாநாயக்க

Report Print Kamel Kamel in சமூகம்

நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் திருப்தி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் மக்களுக்கு சாதகமானது எனவும், திருப்தி அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத் திட்டம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும், கட்சி என்ற ரீதியில் வரவு செலவுத் திட்டம் குறித்த வாக்கெடுப்பில் எவ்வாறு தீர்மானம் எடுப்பது குறித்த நிலைப்பாடு பின்னர் வெளியிடப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் அனைத்து விடயங்களையும் எதிர்க்கும் எதிர்க்கட்சிக் கலாச்சாரத்தை மாற்றியமைக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

ஆக்கபூர்வமான முன்மொழிவுகளுக்கு ஆதரவளிக்கப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சுப் பதவிகளை வகித்து வருகின்றார் எனவும் அந்த அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகளை ஆதரித்து ஏனைய அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகளை நிராகரிப்பது பொருத்தமானதல்ல என துமிந்த திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

Latest Offers