யாழ்ப்பாண மீனவர்களுக்கு வலையில் சிக்கிய அதிர்ஷ்டம்!

Report Print Vethu Vethu in சமூகம்

யாழ்ப்பாண கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்களுக்கு அதிர்ஷ்டமாக மீன் ஒன்று சிக்கியுள்ளது.

யாழ்ப்பாணம் - பாசையூர் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்களுக்கே நேற்று காலை இந்த மீன் சிக்கியுள்ளது.

104 கிலோ கிராம் நிறையுடைய பாரியளவிலான மீன் சிக்கியதாக மீனவர்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.

அதிர்ஷ்டமாக பாரிய மீன் கிடைத்த போதிலும், அதனை ஏலத்தில் எடுக்க எவரும் முன்வராமை ஏமாற்றம் அளிப்பதாக மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

எனினும் இந்த மீனை பாரிய விலைக்கு விற்பனை செய்யும் நோக்கில் யாழ்ப்பாண மீன் சந்தைக்கு கொண்டு செல்வதாக மீன்வர்கள் தெரிவித்துள்ளனர்.

Latest Offers

loading...