ஹட்டனில் தீ விபத்து - ஒரு வீடு முற்றாக சேதம்

Report Print Thirumal Thirumal in சமூகம்

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா கீழ்பிரிவு தோட்ட குடியிருப்பில் ஏற்பட்டுள்ள திடீர் தீ விபத்தினால் ஒரு வீடு முற்றாகவும், மற்றைய வீடு பகுதியளவிலும் எரிந்து சேதமாகியுள்ளன.

குறித்த சம்பவம் நேற்றிரவு 11.45 மணியளவில் ஏற்பட்டுள்ளதுடன் ,24 வீடுகள் கொண்ட தொடர் லயன் குடியிருப்பிலேயே இவ்வாறு இடம்பெற்றுள்ளது.

தீ ஏற்பட்ட போது வீட்டில் இருந்தவர்கள் கூச்சலிட்டதையடுத்து, அயலவர்கள் இணைந்து ஏனைய வீடுகளுக்கு தீ பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தீயினால் முற்றாக எரிந்த வீட்டில் பெருமளவிலான வீட்டு உபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், தங்க நகைகள், ஆடைகள் என பெருமளவிலான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன.

இதேவேளை இது தொடர்பாக ஹட்டன் பொலிஸ் நிலையத்திற்கும், தோட்ட நிர்வாகத்திற்கும் பிரதேசவாசிகளால் தகவல் வழங்கப்பட்டதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் தீ பரவலுக்கான மேலதிக விசாரணகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன்போது பாதிக்கபட்ட குடும்பங்களுக்கு தோட்ட நிர்வாகம் தேவையான உதவிகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.