கிழக்கு மாகாண அபிவிருத்தி இணைப்பாளர் நியமனம்

Report Print Dias Dias in சமூகம்

கிழக்கு மாகாண அபிவிருத்தி இணைப்பாளராக சண்முகம் குகதாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

திருகோணமலை, கச்சேரியில் நேற்று அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

இலங்கைப் பிரதம அமைச்சரின் கீழுள்ள தேசியக் கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், மறுவாழ்வு, தொழிற்பயிற்சி, திறன்விருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சு கடந்த 01ஆம் திகதி இவரை கிழக்கு மாகாண அபிவிருத்தி இணைப்பாளராக நியமித்துள்ளது.

திருகோணமலை, திரியாயை பிறப்பிடமாகக் கொண்ட இவர் அவ்வூரின் முதற்பட்டதாரியாவார்.

குகதாசன் பொருளாதார அபிவிருத்தித் திட்டமிடலில் இளநிலைப் பட்டமும் (B.A.) அரச அறிவியலில் முதுநிலைப் பட்டமும் (M.A.) பயின்ற தமிழ்ப் புலமையாளர் ஆவார்.

இவர், கனடா அரசின் 'குடியமர்வும் வேலைவாய்ப்பும்' திட்டத்தில் இணைப்பாளராகவும், ரொரன்ரோ கத்தோலிக்க கல்விச் சபையின் பன்னாட்டு மொழிகள்

கற்கைத் துறையின் இணைப்பாளராகவும், கனடாத் தமிழ்க் கல்லூரியின் பட்டப் படிப்புகள் துறைத் தலைவராகவும் கனடா நாட்டில் பணிபுரிந்தவர்.

இவர் 2018ஆம் ஆண்டு தை மாதம் தொடக்கம் அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் இணைப்புச் செயலாளராகப் பணிபுரிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers