மன்னார் நகர் பகுதியில் ஆபத்தான கிளைமோர் குண்டு மீட்பு

Report Print Ashik in சமூகம்

மன்னார் நகர் பகுதியில் ஆபத்தான கிளைமோர் குண்டு ஒன்றினை மன்னார் பொலிஸார் இன்று மீட்டுள்ளனர்.

மன்னார் - பெரியகடை பள்ளிவாசல் ஒழுங்கை மற்றும் மீன் சந்தை பகுதிக்கு செல்லும் பிரதான பாதை சந்தியிலிருந்து குறித்த கிளைமோர் குண்டு மீட்கப்பட்டுள்ளது.

மன்னார் நகர சபை ஊழியர்களினால் துப்பரவுப்பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் குப்பைக்குள் இருந்து குறித்த கிளைமோர் குண்டு மீட்கப்பட்டுள்ளதுடன், சுமார் 3 கிலோ கிராம் நிறையுடையது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பகுதியில் அதிகளவிலான பழைய இரும்புகள் கொள்வனவு செய்யும் கடைகள் காணப்படுகின்றமையினால் பழைய இரும்பு பொருட்களுடன் கலந்து குறித்த கிளைமோரும் வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

அதே நேரத்தில் குறித்த வெடி பொருள் தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers

loading...