மொரவெவ பிரதேசத்தில் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிப்பணம்

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை, மொரவெவ பிரதேசத்தில் நீண்ட காலமாக சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கான உதவிப்பணம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

மொரவெவ சமூக பராமரிப்பு நிலையத்தில் இன்று பிரதேச செயலாளர் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றுள்ளது.

இந்நிகழ்வில் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட 115 நோயாளர்களுக்கு 5000 ரூபாய் வீதம் கொடுப்பனவுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கான விண்ணப்பங்களை சமூக சேவைகள் திணைக்களத்தின் உத்தியோகத்தரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், இன்றைய தினம் வழங்கப்படாதவர்களுக்கு மிக விரைவில் கொடுப்பனவுகள் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மொரவெவ பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.

Latest Offers